» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென் மாவட்ட அளவிலான அழகு கலை போட்டி!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:53:13 AM (IST)

கோவில்பட்டியில் தென் மாவட்ட அளவிலான அழகு கலை, ஆரிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி ராஜ் மஹாலில் அழகு கலை, தையல், ஆரி, மெஹந்தி உள்ளிட்ட போட்டிகளும் பள்ளி மாணவர் மாணவிகளுக்கான யோகா, பரதம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில், இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன்,தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்க தலைவர் ராஜ ராஜேஸ்வரி, பொதுச்செயலர் பரமேஸ்வரி, பொருளாளர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட செயலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










