» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனிநபர் ஆக்கிரமிப்பால் 11 குடும்பங்கள் கடும் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:46:26 AM (IST)

சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் தனி நபரின் நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் கிராமம், புதுமனை – காமராஜர் ஆதித்தனார் சாலை இணைப்பு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் 8 அடி அகல நடைபாதை மீது ஒரு நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த 11 குடும்பங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "அரசு விதிப்படி சர்வேயர் அளவீடு செய்து கல் நட்டிருந்த போதிலும், அந்த நபர் கற்களை அகற்றி மீண்டும் வேலி அமைத்து நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் 11 குடும்பங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், அரசு அளவீட்டு கல் மீண்டும் நட்டுவைத்து நடைபாதையை நிரந்தரமாகப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு செய்த நபருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு நகல்கள் சப்-கலெக்டர், தாசில்தார், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் சண்முககையா எம்எல்ஏ, சப் கலெக்டர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும், கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










