» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.13-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:42:48 AM (IST)
தூத்துக்குடி, கோவில்பட்டி உள்பட 7 ஊர்களில் வருகிற 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 13-ஆம் தேதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வு உள்பட மொத்தம் 15 அமர்வுகள் நடக்கிறது.
இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதால், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் எதிர் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுபாஷினி தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










