» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் தீ விபத்து!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:08:31 AM (IST)
திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், நாகர்கோவில் சாலையில் ஆவுடையார்குளம் அருகில் உள்ளது. தற்போது, தொடர் மழை மற்றும் நீர் வரத்தால் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் மண்டபத்தில் மின்கசிவு ஏற்பட்டு நுழைவுப் பகுதியில் இருந்த மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். சம்பவம் அறிந்து, கோயில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பணியாளர் ஜெகன், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், போலீசார் வந்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










