» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைக்காலத்தில் பல்லாங்குழியான சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:35:53 AM (IST)



பொதுமக்கள் நலன் கருதி முத்துலாபுரம் - தோல்மலைப்பட்டி - கடலையூர் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில அரசின் நெடுஞ்சாலை துறையில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலை, ஊரக வளர்ச்சி துறையில் முதல்வரின் கிராம சாலைகள், வட்டார ஊராட்சி சாலை, பிரதம மந்திரி கிராம சாலை, மற்றும் மத்திய தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு வகையான சாலைகள் உள்ளன. இச்சாலைகள் மத்திய மாநில அரசுகளின்  நிதியில் இருந்து பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்கின்றனர். 

கடந்த காலங்களில் புதிய தார்ச்சாலைகள் ரோடு ரோலர் இயந்திரம் மூலம அமைக்கப்பட்டது. இதனால் சாலைகள் சமதளமாக இல்லாமல் மலைமுகடு போல் சாலையின் நடுவில் மேடாக இருக்கும். ஆனால் தற்போது போடப்படும் அனைத்து சாலைகளும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் மெஷின் மூலம் பேவர் ரோடு எனப்படும் சமதள சாலை  அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆயுட்காலம் ஐந்தாண்டுகளாகும். 

இச்சாலையில் மழை நீர் தேங்காது பள்ளம் ஏற்படாது. இதனால் இது போன்ற புதிய தொழில்நுட்ப சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு நெடுஞ்சாலைதுறையின் கட்டுப்பாட்டில் முத்துலாபுரம் - தோல் மலைப்பட்டி - கருப்பூர் - கடலையூர் சாலை மற்றும் கருப்பசாமி கோவில்பட்டி - வீரப்பட்டி - மலைப்பட்டி . கோவில்பட்டி சாலையில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. 

இக்கிராம மக்கள் மேற்படி சாலையை பயன்படுத்தியே பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும், மற்றும் பல்வேறு பணிகளுக்கும் செல்கின்றனர். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தவிர சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு கிணறு போல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடிய வில்லை. கர்ப்பிணி தாய்மார்கள் அவசரத்திற்கு மருத்துவமனை செல்வதற்கு வாடகை வாகனங்கள் கூட வர மறுக்கின்றனர். 

இதனால் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு பேருந்துகள் மோசமான சாலையை காரணம் காட்டி அடிக்கடி கட் அடிக்கின்றன. பொதுமக்கள் நலன் கருதி முத்துலாபுரம் - தோல்மலைப்பட்டி - கடலையூர் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் தலைவர் அ.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory