» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக்ஃப், வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம்!

சனி 6, டிசம்பர் 2025 3:37:33 PM (IST)



வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேட்டுப்பட்டி திடலில், மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தொகுதி செயலாளர் ரியாஸ் வரவேற்பு உரையாற்றினார். 

மேலும், மாநில மீனவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர்கௌது மைதீன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அஜீஸ், தொகுதி தலைவர் காதர் உசேன், தொகுதி பொருளாளர் அப்துல் ரசாக், திரேஸ்புரம் கிளை தலைவர் தாஜுதீன், மஸ்ஜிதே முகத்தஸ் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர் மஸ்ஜிதே முகத்தஸ், இளைஞர் அறக்கட்டளை நிர்வாகிகள், உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் அணி, மாநில துணை தலைவர், கிண்டி அன்சாரி, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், திராவிட முன்னேற்றக்கழகம் வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், யூசுப், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். கிதர் பிஸ்மி, மத்திய மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், விடுதலை சிறுத்தைகள் கட்சி அர்ஜுன், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோல்டன் பரதர் உட்பட பலர் கலந்து கொணடனர். எஸ்டிபிஐ தொகுதி துணைத் தலைவர் எடிசன் நன்றியுரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் மைதீன்கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory