» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம் : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
சனி 6, டிசம்பர் 2025 10:52:17 AM (IST)

தூத்துக்குடியில் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி அம்பேத்கா் 69 வது நினைவு நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சாா்பில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிசேக், மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை மாவட்ட தோ்தல் தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர், ஆகியோா் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்.
நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜெயசீலன் இளைஞர் பாசறை அமைப்பாளர் முத்துக்குமார் வழக்கறிஞர் பாசறை அமைப்பாளர் ரமேசுகுமார், மற்றும் அன்னலட்சுமி, தமிழ் நேயன், மாரிமுத்து, செல்லப்பா, வடிவேல், தாமஸ், ஜலாலுதீன், சேகர், சகாயம், பாக்கியராஜ், சுப்புராம் செல்லத்துரை, விஜய், ராஜேஸ்குமார், துரைசிங், முருகன், அந்தோணி தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










