» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி : நடவடிக்கை எடுக்க எஸ்.எஃப்.ஐ கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 10:33:58 AM (IST)

கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூடிக்கிடக்கும் கழிவறையை சரி செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலையால் மாணவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதற்கு சிறிது காலமே இருப்பதால் இது மாணவர்களின் உடல் நலத்தையும், கல்வியையும் பாதிக்கும். பள்ளியில் இரண்டே கழிப்பறை இருந்தும் அதையும் பள்ளி மூடி கிடப்பில் போட்டுடிருக்கிறது.
இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்காக மூடிக்கிடப்பில் இருக்கும் கழிவறையை சரி செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூடுதலாக சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறை அமைத்துதர வேண்டும் என்றும் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலருக்கு மாவட்டச் செயலாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










