» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!
வியாழன் 20, நவம்பர் 2025 3:43:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில், கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ் குமார் இசக்கிமுத்து காவலர் பேச்சி ராஜா ஆகியோர் இன்று அதிகாலை 04.30 மணியளவில் ஸ்டெர்லைட் அருகே, பைபாஸ் ஜோதி நகர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் பீடி இலைகள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில், சுமார் 35 கிலோ வீதம் 59 மூட்டைகளில் இருந்த சுமார் 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றபட்டது. இதன் மதிப்பு 69 இலட்சம் ஆகும். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றபட்ட பீடி இலைகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
naan thaanNov 21, 2025 - 05:56:46 PM | Posted IP 172.7*****
அதெப்படி திமிங்கலம் எப்பவும் வண்டியும் பொருளும் மட்டும் மாட்டுது ...
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











எல்லாம்Nov 23, 2025 - 08:54:44 AM | Posted IP 162.1*****