» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யாதது ஏன்? மாணவர் சங்கம் கேள்வி!

வியாழன் 20, நவம்பர் 2025 3:37:25 PM (IST)

விளாத்திகுளம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் மாவட்டத் தலைவர் ச. மாடசாமி, மாவட்டச் செயலாளர் ர. ராம் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் இன்று வரை கைது செய்ய முடியவில்லையே ஏன்? இது போலீசாரின் நிர்வாக தோல்வியா? திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான பொற்காலம் என்று மார்தட்டிக் கொள்ளும் சமூக நீதி அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு அரங்கேறும் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு காணுமா?
 
பள்ளிக் கல்வித் துறையே!! மாவட்ட காவல்துறையே!! மாவட்ட நிர்வாகமே!! உடனடியாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் புகார் தெரிவித்தும் அலட்சியமாக செயல்பட்டு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை சீபா ஃபிளவர் லைட்யை துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், இதுபோன்று பாலியல் பிரச்சனைகளை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து

naan thaanNov 21, 2025 - 05:59:21 PM | Posted IP 162.1*****

பள்ளிக்கூடத்துல இதெல்லாம் சகஜம் என்று தாளம்மை ஆசிரியை சொல்லிவிட்டார்களாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory