» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை படைக்கிறார்கள் : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!
வியாழன் 20, நவம்பர் 2025 12:22:18 PM (IST)

தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உலக அளவில் சாதனை படைத்துகொண்டிருக்கின்றனர் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில், உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் தொடரை கோமதிபாய் காலனியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறந்த சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு மோதினர்.
இது ட்ரயம்ப் புக் ஆப் வல்ட் ரிக்காட்ஸ் நிறுவனத்தாரால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை சான்றிதழை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், "திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக அளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு போட்டியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உலக அளவில் சாதனை படைத்துகொண்டிருக்கின்றனர்.
அதற்கு காரணம் அரசின் ஊக்கம் தான் தேவையான உதவிகளையும் நல்ல பயிற்சியாளர்களையும் கொண்டு விளையாட்டு துறை நல்லமுறையில் செயல்படுகிறது. சாதனை செய்வதற்கு எண்ணங்களும் லட்சியமும் தான் முக்கியம் உங்களுக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். இது போன்று பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்த வேண்டும் என்று உங்களை மனதார வாழ்த்துகிறேன் என்றார். போட்டிக்கான நிகழ்ச்சிகளை டாக்டர் மகிழ்ஜான் ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










