» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்தம் 2வது நாளாக தொடர்கிறது

வியாழன் 20, நவம்பர் 2025 10:12:51 AM (IST)

தூத்துக்குடியில் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை நிர்வாகம், அரசும் பணிச்சுமையை குறைக்கவும், ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யாமல் பணியை முறைப்படுத்தி முன்னுரிமைப்படி பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா மாறுதல் உள்ளிட்ட நிலஅளவை பணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள குறுவட்டங்களுக்கு குறுவட்ட அளவர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டநிலஅளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தலைவர் காளிராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசங்கர், துணைத்தலைவர் தேவசேனாதிபதி, பொருளாளர் முருகானந்தம், இணை செயலாளர் ரோமா மெர்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிலஅளவையர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory