» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது - கார் பறிமுதல்!
புதன் 19, நவம்பர் 2025 8:51:08 PM (IST)
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர் 2 பேரை கோவில்பட்டி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போலீசார் ஆய்வு ெசய்த போது முகமூடி அணிந்த 2 கொள்ளையர் இந்த ெகாள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர் விசாரணையில், அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் (வயது 28), ஸ்ரீவில்லிபுத்தூர் முனியசாமி மகன் சாந்தகுமார் (33) ஆகியோர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், இந்த 2பேரும் முகமூடி அணிந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும், அந்த மாவட்ட போலீசார் அவர்களை தேடிவருவதும் தெரிய வந்தது. இவர்களை தனிப்படை போலீசார் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்தக் காரை போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்த சிவக்குமார், சாந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்த கார் மற்றும் ரூ.20 ஆயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










