» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

புதன் 19, நவம்பர் 2025 4:02:31 PM (IST)



காப்புலிங்கம்பட்டி ஊராட்சியில் ரூ.245.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டார். 

மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (19.11.2025) தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம், காப்புலிங்கம்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் காப்புலிங்கம்பட்டி முதல் வடக்கு சுப்பிரமணியபுரம் வரை ரூ.245.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டார். 

காப்புலிங்கம்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டார். 

கே. சிதம்பராபுரம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், விதை பண்ணை திட்டத்தின் கீழ் உளுந்து பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டார். மேலும், கடம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா உடனிருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory