» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருக்கு விருது : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்!
புதன் 19, நவம்பர் 2025 3:16:48 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருக்கு மாநில அளவில் சிறந்த நூலக ஆர்வலருக்கான விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
பொது நூலகத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நூலகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான "டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது”, வாசகர் வட்ட தலைவர்களுக்கு "நூலக ஆர்வலர்” விருது, அதிக உறுப்பினர், புரவலர் மற்றும் நன்கொடை சேர்த்த நூலகங்களுக்கு கேடயம் வழங்குதல் மற்றும் கட்டடம் கட்டுதல் / பராமரிப்பு பணிகளுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளருக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் விழா சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோசுக்கு சிறந்த நூலக ஆர்வலருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 34வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவரது ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி நூலக கட்டிடம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










