» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.13லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
புதன் 19, நவம்பர் 2025 12:28:43 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.13லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் அண்ணாநகா் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுப்புராஜ். வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனா் தனலட்சுமி, பொதுவிநியோக திட்ட சாா்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், வட்டார வளர்ச்சி அலுவலா் ஐகோட் மகாராஜா, உதவி செயற்பொறியாளர் ரவி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










