» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை :‍ பொதுமக்கள் கோரிக்கை!

புதன் 19, நவம்பர் 2025 12:05:15 PM (IST)



தூத்துக்குடியில் பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ரோச் பார்க் துறைமுகம் சாலை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் பயிற்சி மருத்துவர்கள் 3பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இவர்கள் அதிகாலை டியூட்டி முடிந்த பின்னர் ரிலாக்ஸ் செய்வதற்காக பீச் ரோட்டில் காரில் சென்றுவிட்டு பின்னர் விடுதிக்கு செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணம், அந்த சாலையில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாதும் என்று தெரியவந்துள்ளது. இருபுறமும் வாகனங்கள் வரும்போது சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாதால் எதிரே வேகமாக வாகனங்கள் வரும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. 

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் துறைமுக நிர்வாகம் இணைந்து கடற்ரை சாலையில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தொடங்கி தெர்மல் நகர் சந்திப்பு வரை சாலையின் நடுவில் கான்கிரீட் டிவைடர்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து வாகனத்தை நிறுத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

முருகவேல்Nov 19, 2025 - 05:08:27 PM | Posted IP 104.2*****

Port Trustன் அலட்சியமே அதிக விபத்துக்களுக்கு காரணம். நடைபாதை அமைக்கும் கல்லை ரோடு வரை கொட்டி போட்டு பல விபத்துக்கள் நடந்துள்ளன.

Samuel jNov 19, 2025 - 03:45:51 PM | Posted IP 162.1*****

இரவு நேரத்தில் மீன்பிடி துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது கொஞ்சம் கூட எதிர்த்து வண்டி வருகிறது ஓரத்தில் வண்டி போகிறது என்று பார்க்க மாட்டார்கள் அவர்களே பாதி விபத்துக்கு காரணமாக இருக்கிறார்கள் அவ்வளவும் வெளியூர் வண்டி இதை தயவுசெய்து காவல்துறை கவனிக்கவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory