» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் போதை வாலிபர்கள் அட்டகாசம் - பொதுமக்கள் கடும் அவதி!

செவ்வாய் 18, நவம்பர் 2025 3:15:53 PM (IST)



தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் கடைகள் ஒருபுறம் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலைதான் நிலவி வருகிறது. மறுபுறம் தினமும் மது போதையில் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு பேருந்துக்கு செல்ல வரும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படும் சூழ்நிலை தொடர்ந்து நிலவு வருகிறது.

இந்நிலையில் இன்று மது போதையில் 2பேர் பேருந்து நிலையத்தில் படுத்து கிடப்பதும், எழுந்து நடமாடி. சண்டை போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக பெண்கள் அச்சம் அடைந்தனர். போதை ஆசாமிகளால் ஆட்டம் முடியும் வரை காவல்துறை பேருந்து நிலையத்துக்கு வரவே இல்லை. பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பாதுகாவலரும் இதனை கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. 

இது போல போதை ஆசாமிகளால் அண்ணா பேருந்து நிலையம் தினசரி பொதுமக்களுக்கு இடையூறு தான் ஏற்படுகிறது. ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும்  புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

aahaanNov 19, 2025 - 07:10:29 AM | Posted IP 104.2*****

ivanuga namma orukarangala?

மக்கள்Nov 18, 2025 - 11:59:10 PM | Posted IP 162.1*****

அவுங்க போதை ஆசாமி அப்படினு சொல்லாதீங்க. அவுங்க நம்ம அரசோட கஜானா நிரப்ப கடினமாக உழைக்கும் இளைஞர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory