» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத உணர்வு உரிமைகளை பாதுகாக்க சட்டம் வேண்டும் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு கோரிக்கை!

செவ்வாய் 18, நவம்பர் 2025 12:59:00 PM (IST)



மத உணர்வு மற்றும் அடையாள உரிமைகளை பாதுகாக்க சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் தலைமையில் ஐஎஃப்டிஎன் மாநில துணைச் செயலாளர் என்ஏ கிதர் பிஸ்மி இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுவில், "ஒன்றிய மாநில அரசுகள் இந்தியாவில் ஜாதி கொடுமைகளில் இருந்து பாதுகாக்க PCR protection of civil rights இருப்பது போல் மத உணர்வு & அடையாள உரிமைகளை பாதுகாக்க PRR protection of religion rights சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்ற இஸ்லாமியர்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இஸ்லாமியர்களின் சதவீதத்திற்கு ஏற்றவாறு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5% சதவீதத்தில் இருந்து 7% ஆக உயர்த்தி தர கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இஸ்லாமியர்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் இஸ்லாமியர்களின் சதவீதத்திற்கு ஏற்றவாறு இஸ்லாமிய அரசியல் கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் 22 MLA களுக்கு மேற்பட்டும் நாடாளுமன்றத்தில் (MP ) 5 க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அளவில் இஸ்லாமியர்கள் அதிகாரவையில் இடம்பெற மாநகராட்சி,நகராட்சி, கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இஸ்லாமியர்களின் சதவீதத்திற்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தின் மூலமாக உள்ளாட்சி அதிகார சட்ட திருத்தத்தின் மூலமாக இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 90 % வக்பு சொத்துக்கள் இடைப்பட்ட காலங்களில் வருவாய் துறை ஆவணங்களில் அரசு புறம்போக்கு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட வக்பு நிறுவனங்களின் சொத்துக்கள் அந்தந்த பள்ளி சொத்துக்கள் மற்றும் கபர்ஸ்தான்கள் என மாற்றி பதிவு செய்து பட்டா வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் சட்ட மேலவை அமைப்பதன் மூலம் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாத அறிவு ஜீவிகள், மூத்த அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள், இயற்கை மற்றும் சூழலில் ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கடல் சார் நிபுணர்கள்,தலைமுறை சிந்தனையாளர்கள், மத சிந்தனையாளர்கள், அரசியல் சார்பற்ற சமுதாயத்தின் நலன் தரும் சிந்தனைகளையும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான வழிகளையும் இவர்களால் வழங்க முடியும் என்பதை உணர்ந்து உடனடியாக சட்ட மேலவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படடுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory