» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வ.உ.சி. நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன், அரசியல் கட்சியினர் மரியாதை!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:26:59 PM (IST)

தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 89ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், மாநகர இளைஞரணி செயலாளர் ஜீவன் ஜேக்கப், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரசிங், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ஜெயசுதா, தேவகி, வட்டச் செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக
கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 89ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் இரா. சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா மாவட்ட சிறுபான்மை நலபிரிவு செயலாளர் கே. ஜே பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், பகுதிச் செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சந்தன பட்டு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காசிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்கள் ஆண்ட்ரு மணி, சரவணபெருமாள், முனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற் சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மெஜூலா, அன்ன பாக்கியம், முத்துலட்சுமி, மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு இணைச் செயலாளர் லட்சுமணன், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் சம்சுகனி, மிக்கேல், இசக்கி முத்து, வட்டக் கழகச் செயலாளர்கள் கொம்பையா, சொக்கலிங்கம், அசோகன் ஜெயக்குமார் உதயசூரியன் ரங்கன், கனகவேல், பால ஜெயம், சாம்ராஜ் சுந்தர், திலகர் உள்ளிட்ட பலரும் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் செய்திருந்தார்.
ஓபிஎஸ் அணி
தூத்துக்குடி மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை வஉசி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவை சந்திராமேற்கு பகுதி செயலாளர் கே எஸ் செல்லத்துரைமத்திய தெற்கு பகுதி செயலாளர் வி.பி முத்துமாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் ஜெயபால்மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல்மாவட்ட மீனவர் அணி செயலாளர் வின்சென்ட்மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் தங்க மாரியப்பன்தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன்மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன்மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன்மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
பாஜக
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் தலைமையில் வஉசி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத் தலைவி உஷா தேவி மருத்துவ அணி தலைவர் பாலாஜி மாவட்ட மகளிர் அணி செயலாளர் வெள்ளத்தாய் அண்ணராஜ். நிர்வாகிகள் பொய் சொல்லான் செல்வி ராஜேஷ் கனி மாதவன் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது பூத உடல் தகனம் செய்யப்பட்ட ருத்ர பூமியில் இந்து முன்னணி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர், சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரா, சிவா வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்
காங்கிரஸ்
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான க.பெருமாள் சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநிலச் செயலாளர் முனியசாமி, மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ் ரூஸ்வெல்ட் , ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் தலைவர் ராஜாராம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் அமைந்துள்ள வஉசி திருஉருவசிலைக்கு மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்தெற்குமாவட்டதலைவர் சுந்தரலிங்கம் ஆறுமுகநேரி வட்டார தலைவர்முருகன் மாவட்ட துணைதலைவர் பெஸ்கிராஜாமத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் பொன் ராஜாமத்திய மாவட்ட மாணவரணி தலைவர் கணேஷ் அய்யாத்துரை.சாத்தன்குளம் வட்டாரதலைவர் அய்யப்பன்பொது செயலாளர்கள் தினகரன்.கிருபாகரன்.பிரவின் நிர்வாகிகள் காமராஜ் பச்சை பெருமாள் .திமோத்ராஜ்.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஏ.அஜிதா ஆக்னல் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பின்னர் மட்டக்கடை அய்யலூ தெருவில் உள்ள வஉசி சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கல்வி உபகரணங்கள் வழங்கல்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.வி.ஏ.பிரைட்டர் தலைமையில் திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் அமைந்துள்ள வ.உசிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கபட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










