» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் குழந்தைகளுக்கான ஓவிய போட்டி!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:04:54 AM (IST)

தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் நடைபெறும் குழந்தைகள் தினவிழா ஓவியப் போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இயங்கி வரும் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 1, 2, மற்றும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கையின் வண்ணம், வண்ண பறவைகள், சிந்தனை பேசும் சித்திரம் ஆகிய தலைப்புகளிலும், 4, 5, மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என் சுற்றுப்புறம் என் பொறுப்பு, வளர்ச்சி இந்தியா, உலகம் போற்றும் எங்கள் கலாச்சாரம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஓவியப் போட்டியில் சுமார் 3ஆயிரம் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் தங்களது கைவண்ணத்தை வரைந்து குடும்பத்துடன் கே.சின்னத்துரை அன் கோ வருகைபுரிந்து நிறுவன பங்குதாரர் அரி.ராமகிருஷ்ணனிடம் வழங்கி வருகின்றனர். இந்த போட்டியின் பரிசளிப்பு விழா வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










