» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனல்மின் நிலையத்தில் தவறி விழுந்து வடமாநில ஊழியர் உயிரிழப்பு
திங்கள் 17, நவம்பர் 2025 8:05:31 AM (IST)
உடன்குடி அனல்மின் நிலையத்தில் ஏணியிலிருந்து தவறி விழுந்து அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் நேற்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த முன்னா குா்மி (37) என்பவா், அனல் மின் நிலையத்தில் பாய்லரை சுத்தப்படுத்தச் சென்றாராம். அப்போது, அவா் 15 அடி உயர ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து, குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










