» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 7:51:22 AM (IST)

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வலியுறுத்தி பஞ்.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செய்துங்கநல்லூரில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பாசஞ்சர் ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்று வருகின்றன.
இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பிறகு பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்பது இல்லை. இதனால், செய்துங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமமக்கள் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வலியுறுத்தி பஞ்.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் தன்ராஜ் கணேஷ், மாரிசுடலை, செய்துங்கநல்லூர் ஜமாஅத் நிர்வாகி இம்ரான்கான், முத்துகிருஷ்ணன், பாரதி கூட்டுறவு நூற்பாலை நிர்வாகி சந்தியாசி முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஆறுமுகநயினார் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவேண்டும் என்று வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










