» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா திரளான பக்தர்கள் தரிசனம்!

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:42:32 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்பாள் பித்தளை சப்பரம், கிளிவாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் திருவிழா அன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

10-ம் திருவிழா அன்று காலை 10 மணிக்கு மஞ்சள் இடித்தல், சுந்தரபாண்டிய விநாயகர் ஆலயத்தில் பாகம் பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம் பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

11-ம் திருவிழாவான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சங்கர ராமேசுவரர் ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு காட்சி தருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் இரவு சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி- அம்பாள் பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory