» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி நகராட்சிப் பள்ளியில் ரூ.1.44 கோடியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
ஞாயிறு 16, நவம்பர் 2025 9:16:38 AM (IST)

கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் (ஆங்கிலவழிக் கல்வி) பள்ளி மேம்பாட்டு நிதி - உள்கட்டமைப்பு பணி திட்டத்தின்கீழ் ரூ. 82 லட்சத்தில் தரைதளத்தில் 5, பள்ளி மேம்பாட்டு நிதி - இயக்குதல், பராமரிப்புப் பணி திட்டத்தின்கீழ் ரூ. 62 லட்சத்தில் முதல் தளத்தில் 3 என மொத்தம் 8 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி தலைமை வகித்தார்.
சார் ஆட்சியர் {ஹமான்சு மங்கள் முன்னிலை வகித்தார். சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் புதிய வகுப்பறைக் கட்டடம், கல்வெட்டைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி, உலகராணி, ராமர், ஏஞ்சலா, சுரேஷ், தலைமையாசிரியை ராஜசரஸ்வதி, உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அதே தெருவிலும், அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முகாம்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










