» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!

சனி 15, நவம்பர் 2025 3:30:42 PM (IST)



தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி நகர சபையில் ஐந்து முறை நகர மன்றத் தலைவராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த இராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து தம் பதவிக் காலத்தில் தூத்துக்குடிக்குப் பொதுக் கல்லறைத் தோட்டம், கூட்டுறவு வங்கி, சனிக்கிழமை சந்தை, தாய் சேய் நல இல்லம், நகராட்சிக்கு அலுவலகம் கட்ட இடம், குடிநீர்த் திட்டம் என மக்கள் நலப் பணிகள் பலவற்றைச் செய்துள்ளார். எனவே மக்கள் இவரை தூத்துக்குடியின் தந்தை என்று அழைக்கின்றனர். 

தமிழ்நாடு அரசு இவருக்கு மணிமண்டபம் கட்டி அரசு விழா எடுத்து வருகிறது. இந்நிலையில் குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றம் சார்பாக பழைய மாநகராட்சி முன்பு நலத்திட்டங்கள் வழங்கும் விழா (24 ஆவது ஆண்டு) நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். நிகழ்வுக்கு முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் மன்றத்தின் அமைப்பாளருமான எட்வின் பாண்டியன் தலைமையேற்றார். மன்றத்தின் செயலர் சசிகுமார் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவருக்கும் பொருளாளர் டெரன்ஸ் நன்றி கூறினார்.

பழைய மாநகராட்சி முன்பு நடந்த விழாவில்பரத குல மகளிர் அணி தலைவி நிர்மலா கேக்கை வெட்டி தலைவர்களுக்கு வழங்கினார். லூசிய மாற்றுத் திறனாளிகள் இல்லம், முதியோர் இல்லத்திற்குத் தலா பத்தாயிரம் நன்கொயைத் திரேஸ்புரம் ஊர்நலக் கமிட்டி தலைவர் வில்லியம் மஸ்கர்னாஸ் வழங்கினார். 10 ஏழைப் பெண்களுக்கு ஏரல் அருட்பணியாளர் ரவிந்திரன் அடிகளார் தையல் இயந்திரங்களை வழங்கினார்.

நூறு தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி பையை மதுரை புனித சவேரியார் சாவடி டிரஸ்ட் தலைவர் சுரேஷ் மண்ணத்தோ வழங்கினார். நாட்டுப் படகு மீனவர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா போஸ் ரீகன்300 நபர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தொடங்கி வைத்தார். 600 நபர்களுக்கு டிபன் கேரியல் வழங்கும் திட்டத்தை சேவியர் வாஸ், ஞாயம் ரொமால்டு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வீராங்கனை இயக்கத்தின் பேரா. பாத்திமா பாபு, அன்னை பரதர் நலச்சங்க நிர்வாகிகளான காஸ்ட்ரோ, பாஸ்கர், நெய்தல் எழுத்தாளர்கள் இயக்கத்தின் தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ, திரேஸ்புரம் ஊர் நலக் கமிட்டியின் ராபர்ட், ராஜ், அமலிநகர் பிரேசில், ஏரல் பெஸ்கி, தாமஸ், பரத குல எழுச்சிப் போராளிகள் இயக்கத்தைச் சார்ந்த கனிட், ராஜன், ராகேஷ் குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், சேவியர் சில்வா, வர்க்கீஸ், ஆண்ட்ரூஸ், ஜெனிஸ், ஜேபி, அரவிந்த், ரியாஸ் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். 

விழாவை நடத்திய ஹெர்மன் கில்டு, எட்வின் பாண்டியன், எழுத்தாளர் நெய்தல் அண்டோ ஆகியோருக்கு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சார்ந்த விநாயகமூர்த்தி பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். முன்னதாகப் பல ஊர்களைச் சார்ந்தவர்களும், திரேஸ்புரம் மக்களும், தூத்துக்குடி இளைஞர்களும் மாதா கோவில் முன்புள்ள ரோச் விக்டோரியா சிலைக்கு மாலையை அணிவித்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு குரூஸ் பர்னாந்தின் மணிமண்டபம், வட்டத் தெப்பத்திலுள்ள சிலை, பழைய மாநகராட்சியிலுள்ள சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory