» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:31:37 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை தூத்துக்குடி நகர பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறும், மழைகோட் அணிந்தவாறும் பள்ளிக்கூடத்துக்கு சென்றதை பார்க்க முடிந்தது.
கனமழையால் டபிள்யூ.ஜி.சி. சாலை, காசுக்கடை பஜார் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










