» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது வேன் மோதியதில் மீன் வியாபாரி பலி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:11:49 AM (IST)
பேய்க்குளத்தில் பைக் மீது லோடு வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பேய்க் குளம் அருகே உள்ள அருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சா. பொன்னையா (65). மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இவர், பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிபட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். வலது பக்கமாக இருசக்கர வாகனத்தை அவர் திருப்பியதாக தெரிகிறது.
அப்போது ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த க. அருள்நாதன் (29) ஓட்டி வந்த லோடு வேன், பொன்னையாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து லேடு வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










