» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
செவ்வாய் 21, அக்டோபர் 2025 10:50:31 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், மில்லர்புரம் பால்பாண்டி நகர் நிகிலேஷன் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியை மேயர் பார்வையிட்டு உடனடியாக அதிகாரிகளை அழைத்து மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
பின்பு நிகிலேஷன் நகர், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகள், மற்றும் ராஜீவ் நகர் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளை பாரவையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ரியங்கா ஆகியோா் 4ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் வௌ்ளநீா் வௌியேற்றும் பணியையும் சங்கரபோி ஜிபி காலணி பகுதியில் வெள்ளநீா் வௌியேற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலா்கள் சந்திரபோஸ், ஜான், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், வட்டப்பிரதிநிதி வேல்முருகன், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










