» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணி

செவ்வாய் 21, அக்டோபர் 2025 10:33:40 AM (IST)



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி நடைபெற்றது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவிக நகர் சக்தி பீடத்தில் சிறப்பு குருவழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருள் உத்தரவின்படி 40ம் ஆண்டு தீபாவளி சமுதாயப் பணி நடைபெற்றது. 

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரையண்ட் நகர் 1வதுதெரு நேசக்கரங்கள் இல்லம்,  ஹீல் அறக்கட்டளை முதியோர் இல்லம், பால் பாண்டி நகர் நியு நேசக்கரங்கள் முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோர் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், சிதம்பரநகர் பாசக்கரங்கள் முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு மைசூர்பாகு, அதிரசம், முறுக்கு, மிக்சர், காரவடை, உளுந்து வடை உள்ளிட்ட பலகாரங்கள் மற்றும் 200 பேருக்கு வேஷ்டி, சேலைகள், ஆடைகள், மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டது. 

சமுதாயப் பணி நிகழ்வில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திமுருகன், வ.உ.சி. துறைமுக நிர்வாக பொறியாளர் செந்தில்கணேஷ்,  தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்,  கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி, எட்டயபுரம் மன்ற தலைவி கன்னா, புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளர்கள் தனபால், பூல் பாண்டி, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், திருவிக நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பத்மா, கிருஷ்ண நீலா, பிரியா, ஜெயஸ்ரீ உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory