» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி உப்பளங்களில் குவிந்த பிளமிங்கோ பறவைகள்

செவ்வாய் 21, அக்டோபர் 2025 9:02:06 AM (IST)

தூத்துக்குடி கடற்கரையோர உப்பளங்களில் பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வந்துள்ளதால் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரை பகுதியை கொண்டு உள்ளது. இந்த கடற்கரையோரமாக தூத்துக்குடி, புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலையாத்தி காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன.

அதேபோன்று உப்பளங்களும் அதிக அளவில் உள்ளன. அலையாத்தி காடுகளும், உப்பளங்களில் வசிக்கும் மிக நுண்ணிய உயிரினங்களும் ‘பிளமிங்கோ’ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளுக்கு ருசியான இரையுடன் சொர்க்கமான பகுதியாக விளங்கி வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் அதிக அளவிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக தூத்துக்குடி கடற்கரையோர அலையாத்தி காடுகளுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டில் ரஷ்யா, கஜகஸ்தான், ஆஸ்திரேலியா பகுதிகளில் வசிக்கும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் தூத்துக்குடிக்கு வந்தவண்ணம் உள்ளன.

பொன்நிற உப்புக்கொத்தி, வெண்மார்பு உப்பு கொத்தி, அரிவாள் மூக்கு உள்ளான், சின்னமூக்கு உள்ளான், பேதை உள்ளான், மஞ்சள்கொத்தி உள்ளான், ஆற்றுமண்கொத்தி, பச்சைகால் உள்ளான், சங்கு வளை நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் வருவது வழக்கம்.

இந்த மாதத்தில் பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளன. இந்த பறவைகள் நீண்ட கால்கள், வளைந்த மூக்கு, இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது.

இந்த பறவைகள் கூட்டமாக நடைபோடுவது காண்போரை மயக்கும் வகையில் உள்ளது. இந்த பறவைகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும் வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வெண்மை நிறம் கொண்ட உப்பளங்கள் இளஞ்சிவப்பு நிற பிளமிங்கோ பறவைகளால் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory