» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொடர் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது : தூத்துக்குடியில் மக்கள் அவதி!
திங்கள் 20, அக்டோபர் 2025 10:02:38 AM (IST)

தூத்துக்குடியில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையான இன்று தண்ணீர் முட்டளவு தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். இது போல் தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. மழைவெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)











ராஜாOct 21, 2025 - 10:46:14 AM | Posted IP 172.7*****