» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி வழிப்பறி : 3பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

திங்கள் 20, அக்டோபர் 2025 9:24:20 AM (IST)

தூத்துக்குடியில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த 3 போ் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். சம்பவத்தன்று இவா் லாரியில் இந்திய உணவுக் கழக கிடங்கு அருகே வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 மா்ம நபா்கள், லாரியை வழிமறித்துள்ளனர்.

மேலும் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 4,500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம். காயமடைந்த கமலக்கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory