» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலைப் பொருள்கள் கடத்திய 4 பேர் கைது : கார், பைக் பறிமுதல்
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:00:47 AM (IST)
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்து, கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதி அணுகு சாலையில் நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற காரையும், அதன் பின்னால் வந்த பைக்கையும் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், கார் ஓட்டுநர் கோவில்பட்டி காந்தி நகர் ஜீவா தெருவைச் சேர்ந்த லட்சுமண பாண்டியன் மகன் குரு ராமச்சந்திரன் (28), காரில் இருந்தவர்கள், வானரமுட்டி நடுத்தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (44), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வடகரை தாயனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிராஜிதின் மகன் தம்முல் அன்சாரி (27), பைக் ஓட்டுநர் கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன்(19) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, சுமார் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள், அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கார், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










