» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துபாயிலிருந்து கடத்திய ரூ.3.75 கோடி சிகரெட்டுகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 8:55:28 AM (IST)



துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு பேரீச்சம்பழத்துக்கு இடையே மறைத்துவைத்து கடத்தி வரப்பட்ட ரூ.3.75 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் ஜெபல்அலி துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அதில், ஒரு கண்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் சந்தேகமடைந்த மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகள் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து ஆய்வு செய்ததில் அது போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கண்டெய்னரை அதிகாரிகள் சோதனையிட்டதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பண்டல்களும், அதற்கு கீழ் 20 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய 1,300 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3.75 கோடியாகும்.

சிகரெட் பெட்டிகளையும், ரூ.55 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory