» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அக்.22, 23ல் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 8:47:25 AM (IST)

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 22, 23-ம் தேதிகளில் வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணிமனை பராமரிப்பு  பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 22, 23-ந் தேதிகளில் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அதன்படி, பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் வண்டி எண் 16731 மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் வண்டி எண் 16732  ஆகிய இரண்டு ரயில்களும் 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படுகிறது. பின்னர் 2 நாட்களும் மதியம் 2 மணிக்கு வாஞ்சிமணியாச்சியில் இருந்து பாலக்காடு புறப்பட்டு செல்லும்.

இது போல செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் வண்டி எண் 56742 மற்றும் நெல்லை செங்கோட்டை  பயணிகள் ரயில் வண்டி எண் 56743 ஆகிய 2 ரயில்களும் சேரன்மகாதேவி-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மதியம் 2:03 மணிக்கு சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு செல்லும் என தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory