» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூக்கு தூக்குவோம்! தூய்மை காப்போம்!! - ரோட்டரி கிளப் ஆஃப் பேர்ல் சிட்டி சார்பில் விழிப்புணர்வு!

சனி 18, அக்டோபர் 2025 8:46:12 PM (IST)



தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆஃப் பெர்ல் சிட்டி சார்பில் "தூக்கு தூக்குவோம்! தூய்மை காப்போம்!” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆஃப் பெர்ல் சிட்டி சார்பில் "தூக்கு தூக்குவோம்! தூய்மை காப்போம்!” என்ற தலைப்பில், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல உகந்த எவர்சில்வர் தூக்குவாளிகள் (Metal Carry Pot) வழங்கும் நிகழ்ச்சி, தெற்கு காவல் நிலையம் அருகில் கார்த்திக் காபி ஷாப்பில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்வை, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். ஆணையர் எஸ். பிரியங்கா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை, பப்ளிக் இமேஜ் குழுத் தலைவர் மற்றும் கார்த்திக் காபி ஷாப் & ஹோட்டல் சரவணாஸ் நிறுவனருமான செந்தில் ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தூக்குவாளி வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் பேர்ல் சிட்டி தலைவர் ஜே. விக்டர், செயலாளர் எஸ். கிருஷ்ணசாமி, மற்றும் உறுப்பினர்கள் சுப்புராஜ், அபு தாமஸ், விக்னேஷ் வீரபாகு, எஸ்எம் மூர்த்தி, சுரேஷ், சண்முகநாதன், காளி ஆனந்த குமார், சங்கர சுப்பிரமணியன், செந்தில் வீரபாகு, செந்தில் நாராயணன், கார்த்திகேயன், சஹாயராஜ் பெர்னான்டோ, பொதிகை கண்ணன், தெய்வ சிகாமணி, பய்ஸர், இப்ராஹிம், சுஷீல் குமார், எஸ்.ஆர்.எஸ். பாலாஜி, கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory