» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையோர முள் மரங்களால் போக்குவரத்துக்கு இடையூறு: உடனடியாக அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை!

சனி 18, அக்டோபர் 2025 10:58:28 AM (IST)



நாசரேத் அருகே புன்னையடி -  பூச்சிக்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள முள்மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, கச்சனாவிளை கிராமப்புற பகுதியில் புன்னையடி- பூச்சிகாடு செல்லும் சாலை குதிரை மொழி காப்பு காட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இரு பக்கமும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக கொக்கி முள் செடிகள் அமைந்துள்ளன. 

இந்த கொக்கி முள் செடிகள் சாலையின் இரு பக்கமும் அடர்த்தியாக இச் சாலையை சூழ்ந்திருப்பதால், இவ்வழியாக பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு முள் மரத்தினால் காயங்கள் ஏற்படுகிறது. மேலும் தூண்டில் அமைப்பு கொண்ட இந்த கொக்கி முள் செடி கடுமையான காயங்களை ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், பாரம்பரிய வேம்பு பனைமரம் போன்ற அனைத்து மரங்களையும் அழித்துவிடக் கூடியது.

தற்போது வடகிழக்கு மழை பெய்து வருவதால் மழை தண்ணீர் பட்டு ரோட்டில் சாயும் நிலையில் உள்ளது.ஆகையால் மேற்படி சாலையின் இரு பக்கமும் உள்ள  முள் மரங்களை அகற்றி மேற்படிச்சாலையில் பயணிக்கும் பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


மக்கள் கருத்து

MansoorOct 18, 2025 - 01:37:23 PM | Posted IP 162.1*****

ஆறுமுகநேரி- ஆத்தூர் சாலையோர முள் செடிகளை அகற்ற வேண்டும் மோசமான அரசு மற்றும் அதிகாரிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory