» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அ.தி.மு.க. 54வது ஆண்டு துவக்க விழா
சனி 18, அக்டோபர் 2025 10:57:25 AM (IST)

தூத்துக்குடியில் அ.தி.மு.க.வின் 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் அ.இ.அ.தி.மு.க.வின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழுத்தலைவர் என்.சின்னத்துரை முன்னிலையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ.எஸ்.சேகர். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ்குமார், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி துணை செயலாளர்கள், ஏ.ராதா ஆனந்த் சண்முகத்தாய் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










