» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 18, அக்டோபர் 2025 9:11:03 AM (IST)
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கங்கா பரமேசுவரி காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (57). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியின் மகள் கோவையில் படித்து வருகிறார். இதனால் ராமகிருஷ்ணன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
நேற்று அதிகாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 23 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போன் ஆகியவை திருடுபோயிருந்தது. ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீடு புகுந்து நகை, செல்போனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










