» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம் கருத்தரங்கம்: எஸ்பி பங்கேற்பு !
வெள்ளி 17, அக்டோபர் 2025 8:12:19 PM (IST)

தூத்துக்குடியில், "ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து இன்று (17.10.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவ மாணவிகளிடம் அனைவரும் பாகுபாடின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மற்றும் போதைப்பொருளினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் இளைஞர்கள் போதைப் பொருளை தவிர்த்து எதிர்காலத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு குற்றவழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜமால், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, கல்லூரி முதல்வர் பானுமதி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










