» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்; போக்குவரத்து பாதிப்பு!
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:17:52 PM (IST)

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமார் (35) தண்ணீர் லாரி டிரைவர். இவர் புதுக்கோட்டையில் இருந்து லாரியில் தண்ணீருடன் முத்தையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்செந்தூர் ரோடு, உப்பாற்று ஓடை அருகே லாரியை திருப்ப முயன்றபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது.
இதனால் தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழ்நது நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே லாரி கவிழ்ந்ததால் தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










