» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துாத்துக்குடியில் பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு : தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 12:08:13 PM (IST)

துாத்துக்குடியில் பல ஆண்டுகளாக வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில், வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள், தங்களது வீடுகளுக்கு பட்டா பெற முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின், மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கரராமன் (எ) கண்ணன் அனுப்பியுள்ள மனுவில், "துாத்துக்குடி தாலுகா, சங்கரப்பேரி கிராமத்தில், துாத்துக்குடி வருவாய்த்துறையில், 'குப்பை கிடங்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்த 14.36 ஏக்கர் நிலத்தை, அப்போதைய துாத்துக்குடி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நில எடுப்பு கட்டணத்தை பெற்றுக் கொண்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பெயரில் வழங்கப் பட்டு, அதன் பின்னர் அரசு அனுமதி வழங்கப்பட்டு,'சங்கரப்பேரி சைட் அன்ட் சர்வீஸ் ஸ்கீம்' என்ற பெயரில், மொத்தம் 1,055 மனை பிரிவுகள் ஏலம் மூலம், பல்வேறு வருவாய் பிரிவு மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு, கிரையப் பத்திரங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்டன.
இந்த நிலங்களின் வகைப்பாட்டை 'அரசு நிலம் (குப்பை குவியல்)' என்பதை, 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்' என்ற பெயரில், பட்டா நிலமாக வகைப்படுத்தாமல் விட்டுவிட்டபடியால்,மேற்கண்ட நிலங்கள் அனைத்தும் தற்போது வரை, 'அரசு நிலம்' என்றே வருவாய் துறை ஆவணங்கள் அனைத்திலும் உள்ளது. தமிழ்நாடு அரசின் மென்பொருள் தொகுப்பிலும், மேற்கண்ட நிலங்கள் தற்போது வரை, 'அரசு நிலம்' என்று தான், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இந்த தவறு காரணமாக, 'சங்கரப்பேரி சைட் அன்ட் சர்வீஸ் ஸ்கீம்'மூலம் பல்வேறு வருவாய் பிரிவு மக்கள் கிரையப் பத்திரங்களை, தங்கள் பெயருக்கு பதிவு செய்து வாங்கியிருந்தாலும், தங்கள் பெயருக்கு பட்டா வாங்க முடியவில்லை. இந்த நிலங்களுக்கு, இணைய வழியிலும் பட்டா கோரி, விண்ணப்பம் செய்ய முடிய வில்லை. இது குறித்து, பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம், முறையிட்டும் பயனில்லை. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
'அரசு நிலம்' என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தால், இணைய வழியில் ஆவணப் பதிவினை மேற்கொண்டு செயல்படுத்த முடியாமல், தடுக்கப்பட்டு விடும் நடைமுறை, கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து செயல் பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால், மேற்கண்ட சர்வே எண்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனைப் பிரிவுகளை, கிரையம் பெற்றுள்ள 1,053 மனை உரிமைதாரர்கள் அனைவரும், தங்களது அவசர தேவைக்கு விற்பனை செய்யவோ, வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறவோ, குடும்ப உறுப்பினர்களுக்கு தான செட்டில்மெண்ட் பத்திரமோ அல்லது உயில் ஆவணமோ, வெளிநாடு செல்லும் போது சொத்துக்கள் தொடர்பாக, பொது அதிகார ஆவணங்களை பதிவு செய்து கொடுப்பது உட்பட பல பணிகளை செய்ய முடியாத, இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர், இதில் சிறப்பு கவனம் செலுத்தி 1,055 மனை உரிமைதாரர்கள் அனைவரது பெயரிலும், பட்டா நிலமாக வகைப்பாடு மாற்றம் செய்து புல தணிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் சிறப்பு முகாம் நடத்தி, அதன் மூலம் தற்போதுள்ள 1,055 உரிமைதாரர்களுக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஸ்தீரணங்களுக்கு தனி பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
G. Anto IgnatiusAug 12, 2025 - 01:47:50 PM | Posted IP 172.7*****
I request our Chief Minister to solve this problem as soon as possible. I will help to see the smile in the face of poor.
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)











ராஜ்Aug 12, 2025 - 01:58:30 PM | Posted IP 162.1*****