» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடுதி உரிமையாளர் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:22:23 AM (IST)
தூத்துக்குடியில் தனியார் விடுதிக்குள் நுழைந்து உரிமையாளர் உள்பட 2 பேரை வெட்டிய சம்பவம் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி, போல்பேட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர், எட்டயபுரம் சாலையில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இதில், துப்புரவுப் பணியாளராக லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பார்வதி பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் பார்வதியின் மகன் செல்வம், மற்றும் அவரது நண்பரும் விடுதிக்கு வந்துள்ளனர்.
மேலும், முருகானந்தம் மற்றும் பார்வதியிடம் தகராறு செய்ததோடு, அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம், பார்வதி ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










