» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களை நடு வழியில் இறக்கிவிட்ட அரசு பஸ் - பொதுமக்கள் போராட்டம்... பரபரப்பு!!

சனி 9, ஆகஸ்ட் 2025 4:52:05 PM (IST)



எட்டயபுரம் அருகே பள்ளி மாணவர்களை நடு வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் தாப்பாத்தி, அயன்வடலாபுரம், அச்சங்குளம் வேடப்பட்டி, மேலக்கரந்தை, சக்கிலிபட்டி, மாசார்பட்டி, அயன்ராஜாபட்டி,வெம்பூர் அழகாபுரி போன்ற கிராமங்களைச் சார்ந்த மாணவ மாணவியர் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர் இம்மாணவ மாணவியர் கோவில்பட்டியில் இருந்து அரசு பேருந்து காலை 7:15 மணிக்கு புறப்பட்டு தாப்பாத்தி, மேலக்கரந்தை, வெம்பூர் வழியாக செல்லும் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர் 

இந்நிலையில் நேற்றைய தினம் காலை 7:55க்கு மேலக்கரந்தையிலிருந்து பந்தல்குடி செல்வதற்கு மாணவர்கள் அப் பேருந்தில் ஏறினர். வெம்பூர் நிறுத்தம் வந்தவுடன் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மேலக்கரந்தை மாணவர்களை சுமார் 11 பேரை படியில் இருந்து இறக்கி விட்டு பஸ்சை எடுத்து சென்று விட்டனர். இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வெம்பூரில் இருந்து மேலக்கரந்தைக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கால்நடையாக வந்து வீடு சேர்ந்தனர். இதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. 

இதே நிலை தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளாக இப்பேருந்தில் காலை 8 மணி பேருந்தில் அதிக கூட்டம் வருவதால் பள்ளி மாணவ மாணவியர் ஏற முடியவில்லை. இதனால் கூடுதல் பேருந்து கேட்டு பல தடவை போராட்டம் நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகள் கூடுதல் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுனால் வரை கூடுதல் பேருந்து இயக்கப்படவில்லை. ஏற்கனவே கோவில்பட்டியில் இருந்து வரக்கூடிய பேருந்தில் கூட்டமாக வருகிறது அது போக இங்கிருந்து பள்ளி மாணவர்கள் 80க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வதால் பேருந்தில் இட வசதி இல்லை. 

இதனால் தினந்தோறும் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமலும் தலைமை ஆசிரியரிடமும் தினமும் தண்டனை பெறுகின்றனர். இதனால் நேற்றைய தினம் பள்ளி செல்ல முடியாத 11 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை 7:55க்கு மேலக்கரந்தைக்கு வரக்கூடிய அரசு பேருந்தை கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன். மற்றும் மேலக்கரந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் மாரீஸ்வரி தலைமையில் சிறை பிடித்து மறியல் செய்தனர். 

அப்போது அங்கு வந்த மாசார்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி கோட்ட மேலாளர் மற்றும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பனிமனை மேலாளர், விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பனிமனைமேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது இன்று முதல் பேருந்து எவ்வித இடையூறும் இல்லாமல் பள்ளிக்கு அனைவரையும் ஏற்றி செல்வதாகவும் இனிமேல் இதுபோன்று எவ்வித சிரமமும் இருக்காது என்று உறுதி அளித்ததன் பேரில் பேருந்து விடுவிக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory