» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 11:17:29 AM (IST)

நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் அதிகபட்சமாக 325 மகளிர் உரிமை தொகை விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு ஆரம்பமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலை குமார் அனைவரையும் வரவேற்றார். இம்முகாமில் 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். மனுக்களுக்கு முகாமிலேயே உடனடியாக தீர்வு காணப்பட்டது. விண்ணப்பம் அளிக்க வந்தவர்களுக்கு வரிசையாக டோக்கன்கள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு திருச்செந்தூர் மின்செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் தலைமையில் உதவி பொறியாளர்கள் ராம் மோகன், சாயி ஹரிஹர கிருஷ்ணன், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மொத்தம் 494 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 325 மகளிர் உரிமைத் தொகைக்கானவை எனபது குறிப்பிடத்தக்கது.
இம் முகாமில் ஏரல் தாசில்தார் செல்வகுமார்,ஆழ்வார்திருநகரி வருவாய் ஆய்வாளர் ஆண்டாள், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன், மிக்கேல் ஜெரோசின், முத்துமாலை,பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி, ஸ்டெல்லா, ஐஜினஸ்குமார், ரதி, ஜெயா, சவுந்திரம், பெனிட்ரோ தினகரன், ரவீந்திரன்,பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள்,கிராம அலுவலர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










