» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கொத்தனார் கைது!
சனி 9, ஆகஸ்ட் 2025 10:53:03 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், ஜேசு நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் நட்டார் (55), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் (45), இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நட்டார் தினசரி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம்.
இதுபோல் நேற்று இரவு குடி போதையில் வந்த அவர் மனைவி முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த முத்தம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நட்டாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










