» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்!

ஞாயிறு 13, ஜூலை 2025 6:24:23 PM (IST)



தூத்துக்குடி இஞ்ஞாசியார் ஆர்.சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. 

கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாமை அருட் பணியாளர் பெஞ்சமின் டிசூசா ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தலைவர் தங்கையா, தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜா ஸ்டாலின், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி உள்பட பலர் பங்கேற்றார்கள்.

இந்த முகாமில் வாத நோய், சர்க்கரை நோய், தோல் வியாதி, உயர் இரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை, மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், பிசியோ தரபி மருத்துவம், அரோமா சிகிச்சை வர்ம சிகிச்சை, விதை சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்பில் பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது.  பங்கேற்றவர்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட்டது. 

இந்த மாபெரும் இயற்கை மருத்துவ சிறப்பு முகாமில் இயற்கை மருத்துவம் ஹீலர் ஜெகன், ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ஆதித்யா, பிசியோதரபி மருத்துவம் டாக்டர் மைக்கேல் ஜான் ஜெயகர் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தார்கள். இந்த மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாமில் தூத்துக்குடி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ முகாமில் பங்கேற்று பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory