» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உயிர் மூச்சு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா : படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஞாயிறு 13, ஜூலை 2025 10:53:10 AM (IST)

தூத்துக்குடி 'உயிர் மூச்சு' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட 'உயிர் மூச்சு'. திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில் வெளியிடப்பட்டது. மது விலக்கின் அவசியத்தை வலியுறுத்துவதுடன், மாரடைப்பு முதலுதவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தை, திரைப்பட துறையினரும், பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
உயிர் மூச்சு திரைப்படம் வெளியிடப்பட்டு 100 நாளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி ஜோரா சினிமாஸ் அலுவலகத்தில் படக்குழுவினர் கேக் வெட்டியும், சால்வை அணிவித்தும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பிராட்வே சுந்தர், தயாரிப்பாளர் மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி, வசனகர்த்தா விவசாயி ஆர்.ஜோதிமணி, நடிகர்கள் செங்குட்டுவன், ராஜ்கபூர், ஜெயம், சுமங்கலி சதீஷ், ராஜேந்திரபூபதி, சிவசு, ஜெகஜீவன், அழகு கலை சங்க தலைவர் எம்.தங்கஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










