» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் வாளுடன் ரவுடிகள் ரகளை : போலீசார் விசாரணை
சனி 12, ஜூலை 2025 8:15:02 PM (IST)
தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் ரவுடிகள் இருவர் வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி சுப்பையாபுரம் 2வது தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் இன்று பிற்பகல் ரவுடிகள் இருவர் வாளுடன் உள்ளே நுழைந்து அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நபர்களுடன் தகராறில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து பார் ஊழியர்கள் கடையடைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மதுபான கூட உரிமையாளர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்
இதை தொடர்ந்து போலீசார் வாளுடன் ரகளையில் ஈடுபட்ட அண்ணாமலை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே அதே மதுபான கூடத்தில் இரவில் மது குடித்துக் கொண்டிருந்த ஒரு நபரை பணம் கேட்டு மிரட்டி பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் அவர் மற்றொரு ரவுடியுடன் சேர்ந்து பாரில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










